இந்நிலையில் “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2” தொடரில் அரவிந்த் கேரக்டரில் மீண்டும் மெர்ச்சி சிவா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக அரவிந்த் போல் வேடமணிந்து மெர்ச்சி சிவா நடித்துள்ள காட்சியை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து வெற்றிகரமான நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் கொடுப்பதில் விஜய் தொலைக்காட்சி முதலிடத்தில் உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கின்றன. அதேபோல் வெற்றி பெற்ற சீரியல்களின் இரண்டாவது பாகத்தையும் வெற்றிகரமாக எடுத்து வருகிறது. அப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2” சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 

இதையும் படிங்க: “குக் வித் கோமாளி” பிரபலம் புகழுக்கு அடித்த ஜாக்பாட்... குவியும் வாழ்த்துக்களால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!

இதன் முதல் பாகத்தில் மெர்ச்சி சிவா மாயன், அரவிந்த் என்ற இரு கதாபாத்திரத்திலும், நாயகியாக ரக்‌ஷிதா மகாலட்சுமியும் நடித்திருந்தனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாம் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்தில் மட்டுமே மெர்ச்சி சிவா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரக்‌ஷிதா மகாலட்சுமி நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: கல்யாணத்திற்கு பிறகும் கட்டற்ற கவர்ச்சியில் சமந்தா... இளம் நடிகைகளை ஓவர் டேக் செய்யும் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

இந்நிலையில் “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2” தொடரில் அரவிந்த் கேரக்டரில் மீண்டும் மெர்ச்சி சிவா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக அரவிந்த் போல் வேடமணிந்து மெர்ச்சி சிவா நடித்துள்ள காட்சியை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் “மாஸ்டர் பிளான் உடன் அரவிந்த் மீண்டும் வருகிறார். அரவிந்த் கெட்டப்பில் மாயன் செம்ம காமெடியாக இருக்கும். மற்றொரு பெரிய திட்டத்துடன் நாம் இருவர் நமக்கு இருவரில் விரைவில்” என பதிவிட்டுள்ளார். இந்த ஸ்பெஷல் சர்ப்ரைஸை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதோ அந்த வீடியோ.....

View post on Instagram