MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபிஸில் 'தாய் கிழவி' தாண்டவம்.!இரண்டு நாளில் 10 கோடி வசூல் செய்து சாதனை!

பாக்ஸ் ஆபிஸில் 'தாய் கிழவி' தாண்டவம்.!இரண்டு நாளில் 10 கோடி வசூல் செய்து சாதனை!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி', எதார்த்தமான நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்து, இரண்டு நாட்களில் ₹10 கோடி வசூலித்துச் சாதனை படைத்துள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 01 2026, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சாதனைமேல் சதனை படைக்கும் தாய்கிழவி.!
Image Credit : X

சாதனைமேல் சதனை படைக்கும் தாய்கிழவி.!

தமிழ் திரையுலகில் குடும்பப்பாங்கான கதைகளுக்கும், எதார்த்தமான கிராமத்து வாழ்வியலுக்கும் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், பிப்ரவரி 27, 2026 அன்று வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் தற்போது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர வைத்துள்ளது. நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான இப்படம், கடந்த இரண்டு நாட்களில் யாரும் எதிர்பாராத விதமாக வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.

24
அசுர வேகத்தில் வசூல் உயர்வு
Image Credit : X

அசுர வேகத்தில் வசூல் உயர்வு

வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ₹2.65 கோடி வசூலித்து நல்ல தொடக்கத்தைப் பெற்றது. ஆனால், படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் பரவிய பாராட்டுகளும் இரண்டாம் நாளில் வசூலை அசுர வேகத்தில் உயர்த்தியுள்ளது. சனிக்கிழமை மட்டும் சுமார் 75% வளர்ச்சி கண்டு, ₹4.65 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் இரண்டு நாட்களில் ₹7.30 கோடி (Net) வசூலை இப்படம் கடந்துள்ளது. உலகளாவிய ரீதியில் கணக்கிடும்போது, வெளிநாட்டு வசூல் மற்றும் பிற மாநில வசூலையும் சேர்த்து இப்படம் வெற்றிகரமாக ரூ. 10 கோடி என்ற மைல்கல்லை இரண்டே நாட்களில் எட்டியுள்ளது.

Related Articles

Related image1
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Related image2
Thaai Kizhavi: மனதிற்கு நெருக்கமான ஒரு மாஸ்டர்பீஸ்.! 'தாய் கிழவி'யை உச்சிமுகர்ந்த இயக்குநர் ஷங்கர்!
34
வெற்றிக்கு மகுடம் சூட்டிய அம்சங்கள்
Image Credit : X

வெற்றிக்கு மகுடம் சூட்டிய அம்சங்கள்

இந்த இமாலய வெற்றிக்குக் காரணம், படத்தில் இடம் பெற்றுள்ள எதார்த்தமான நகைச்சுவை மற்றும் குடும்பப் பாசம் கலந்த கதையமைப்புதான். பவுனுதாயி' என்ற முரட்டுத்தனமான அதேசமயம் பாசமுள்ள பாட்டியாக ராதிகா திரையில் மிரட்டியுள்ளார்.சிங்கம்புலி, முனிஷ்காந்த் மற்றும் பால சரவணன் ஆகியோரின் காமெடி காட்சிகள் ரசிகர்களைக் குலுங்கிச் சிரிக்க வைத்துள்ளன.தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறது.

44
சாரை சாரையாக தியேட்டரில் குவியும் ரசிகர்கள்.!
Image Credit : X

சாரை சாரையாக தியேட்டரில் குவியும் ரசிகர்கள்.!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சனிக்கிழமை இரவு நேரக் காட்சிகளில் 66% இடங்கள் நிரம்பியிருந்தது இப்படத்தின் வரவேற்புக்குச் சான்றாக உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வசூல் இன்னும் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தாய் கிழவி' திரைப்படம் 2026-ம் ஆண்டின் மிகச்சிறந்த லாபம் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
Recommended image2
சந்திரகலா விரித்த வலை.. தானாக வந்து சிக்கிய கார்த்திக்! புதையலையும் அலேக்காக ஆட்டைய போட்ட வில்லி - கார்த்திகை தீபம் அதிரடி சீன்!
Recommended image3
Thaai Kizhavi: மனதிற்கு நெருக்கமான ஒரு மாஸ்டர்பீஸ்.! 'தாய் கிழவி'யை உச்சிமுகர்ந்த இயக்குநர் ஷங்கர்!
Related Stories
Recommended image1
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Recommended image2
Thaai Kizhavi: மனதிற்கு நெருக்கமான ஒரு மாஸ்டர்பீஸ்.! 'தாய் கிழவி'யை உச்சிமுகர்ந்த இயக்குநர் ஷங்கர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved