விஜய் டி.வி-யில் “அது இது எது”, “கலக்கப்போவது யாரு” என பல காமெடி நிகழ்ச்சிகளில் அச்சு அசலாக வடிவேலுவாக வலம் வந்த பாலாஜி, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இளம் வயதில் அவரது திடீர் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக சினிமா துறை மற்றும் டிவி நட்சத்திரங்கள் பலரும் உருக்கமாக வடிவேல் பாலாஜிக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் டி.வி., ‘மிஸ் யூ வடிவேல் பாலாஜி’என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜியின் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து விஜய் டி.வி. பிரபலங்கள் பேச உள்ளனர். இதற்கான புரோமோ வீடியோக்களை விஜய் டி.வி. ஒளிபரப்பாகி வருகிறது.

 

இதையும் படிங்க:  “பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!

இந்த ஷோ வரும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தற்போது வடிவேல் பாலாஜி குரலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலம் ஒருவர் வடிவேல் பாலாஜி குரலில் பேசும் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதைக் கேட்ட மாகாபா ஆனந்த், குக்வித் கோமாளி புகழ், டிடி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதா அந்த வீடியோ... 

View this post on Instagram

#missyouvadivelbalaji 💔😢

A post shared by VijayTeleShow (@vijayteleshow) on Sep 30, 2020 at 10:09am PDT