தமிழகத்தின் பல்வேறு இடங்களின் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், பிரபலங்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் நேரத்தில், நடிகர் விஜய் சேதுபதி, வடிவேலு பாலாஜியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: உள்ளாடையை மேலே போட்டது போல் ஒரு உடையா..? மாடர்ன் என்கிற பெயரில் ஷாலு ஷம்மு அடிக்கும் கூத்தை நீங்களே பாருங்கள்!
 

மாரடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்தது.

விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்க போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து காமெடி செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. ஒருசில படங்களிலும்  கமிட் ஆகி நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: பிணவறையில் வேலை ... பல சோதனைகளை கடந்து வெற்றி பெற்ற வடிவேல் பாலாஜி!
 

விரைவில், வெள்ளித்திரை காமெடியில் தன்னுடைய திறமையை நிரூபித்து உச்சம் தொடுவார் என எதிர்பார்த்த நிலையில், 45 வயதிலேயே இவர்  உயிரிழந்தது பலரையும் வேதனையடைய வைத்தது. 

இதையடுத்து வடிவேல் பாலாஜியின் உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை, நடிகர் விஜய் சேதுபதி வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி நிதி உதவி வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.