பிணவறையில் வேலை ... பல சோதனைகளை கடந்து வெற்றி பெற்ற வடிவேல் பாலாஜி!
விஜய் டிவி தொலைக்காட்சியில் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்த, வடிவேல் பாலாஜி... பிணவறையில் வேலை செய்து, பல கஷ்டங்களை கடந்து பின்னர் காமெடியில் ஜெயித்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

45 வயதே ஆகும் வடிவேல் பாலாஜிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் வடிவேல் பாலாஜி.

உடனடியாக இவருடைய குடும்பத்தினர், இவரை தனியார் மருத்துவமணையில் வைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், கையில் பணம் இல்லாததால் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமணையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வடிவேல் பாலாஜி.

பல வித வடிவேல் கெட்டப்பில் ரசிகர்களை சிரிக்க வைத்த இவர், இந்த இடத்தை பிடிக்க கடந்து வந்த சோதனைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், வடிவேல் பாலாஜி பிணவறையில் தான் வேலை செய்து வந்தார்.

காமெடியில் நிகழ்ச்சியில் ஜொலிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் வேலை செய்வதும் அவசியமானதாக இருந்தது. அவசர அவசரமாக தன்னுடைய வேலையை ஒவ்வொரு முறையும் முடித்து விட்டு வந்து தான் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவரை தனியாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியது, அச்சு அசலாக வடிவேலு போல் இவர் தன்னை வெளிப்படுத்தி கொள்ளாமல், மாடுலேஷன், மட்டும் எடுத்து கொண்டு தனித்துவமக டைலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என வடிவேலுவிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்தி காட்டியது தான்.

சிரிச்ச போச்சி ரவுண்டில்... அசராமல் பெண் கெட்டப்பில் வந்து, ஆண் போட்டியாளர்களிடம், என்ன அப்படி குறுகுறுன்னு பாக்குற, உன் டேஸ்ட் ஏன் இப்படி மட்டமா இருக்குனு தெரியலையே என, இவர் செய்யும் காமெடி அல்டிமேட்.

சமீப காலமாக, மிகவும் பாப்புலர் ஆன வடிவேல் பாலாஜி வெளிநாட்டு ரசிகர்களை கவரும் விதத்தில் பல காமெடி ஷோக்களில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் இவருடைய திடீர் மரணம் குறித்து அறிந்த ரசிகர்கள் மட்டும் இன்றி, இவருடன் ஒன்றாக இணைந்து காமெடி நிகழ்ச்சியில் கலக்கிய பலர், அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்த வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகள், மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.