விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்துள்ள 'மேரி கிறிஸ்மஸ்' ரிலீஸில் திடீர் மாற்றம்! எதிர்பாராத அப்டேட்!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மேரி கிறிஸ்மஸ்' திரைப்படம், ஒரு வாரம் முன்கூட்டியே வெளியாகிறது என படக் குழுவினர் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மேரி கிறிஸ்மஸ்'. இந்த திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் டிசம்பர் 15 ஆம் தேதியன்று வெளியாகும் என இதற்கு முன் அறிவித்திருந்தனர். தற்போது இந்தத் திரைப்படம் டிசம்பர் 8-ஆம் தேதியன்று வெளியாவதாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'மேரி கிறிஸ்மஸ்' ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே போல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இயக்குனர் பாலாவால் ஏமாற்றப்பட்ட மறைந்த இயக்குனர் வி.ஏ.துரை.! கடைசி வரை போராடியும் கிடைக்காத பணம்!
டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் எனும் திரைப்பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த 'மேரி கிறிஸ்மஸ்' படத்தை, ஏற்கனவே ரிலீசுக்கு குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய உள்ளது, ரசிகர்களை உச்சாகப்படுத்தும் விஷயமாக மாறியுள்ளது. விஜய் சேதுபதி -கத்ரீனா கைஃப் இணைந்து நடித்திருக்கும் 'மேரி கிறிஸ்மஸ்' டிசம்பர் மாதம் எட்டாம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.