'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. "அண்ணாத்த" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் செய்திகள்: மீரா மிதுனுக்கே செம்ம டஃப்... அடையாளம் தெரியாமல் மாறிய ஜூலி..! வழக்கு போல் வச்சி செய்யும் நெட்டிசன்கள்!
 

இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா அல்லது புனே போகலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதி, இந்தியாவின் வடமாநிலங்களை விட்டுவைக்கவில்லை. அதனால் மூன்றாம் கட்ட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: இரண்டாம் உலகம் படத்தில் முதலில் ஆர்யா - அனுஷ்காவுக்கு பதில் நடிக்க இருந்தது இவர்கள் தான்..!
 

கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகள் ஷீட்டிங்கை நடத்த அனுமதி கொடுத்துள்ளன. இதனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த பல படங்கள் கேமராவை தூக்கிக்கொண்டு ஷூட்டிங்கிற்கு கிளம்பியாச்சு. டாப்  ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் வலிமை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். 

மேலும் செய்திகள்: சூர்யாவின் 'சூரரை போற்று' படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்..! தடை கூற கோரி வழக்கு..!
 

இந்நிலையில் அண்ணாத்த பட ஷூட்டிங் குறித்து சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் கோபிசந்த், முரட்டு வில்லனாக நடித்து வரும் நிலையில், முதன்மை வில்லனாக பிகில் படத்தின் வில்லன் ஜாக்கி ஷெரிப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியபின் லாஸ்லியா சேர்த்த சொத்துக்கள் இத்தனை லட்சமா? கசிந்த தகவல்...
 

மேலும் தற்போது நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகளை சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தில், ஜனவரி மாதம் முதல் ரஜினிகாந்த் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.