விஜய், அஜித் படங்கள் குறித்து எந்த அறிவிப்பு வெளியானாலும் அதை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்வதற்கு என்றே தல, தளபதி ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் விஜய்யின் "மாஸ்டர்" பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உட்பட் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறாக கொண்டாடினர். 

ரிலீஸ் ஆகியிருப்பது 'பர்ஸ்ட் லுக்கா?', 'இல்லை தளபதி படமா?' என்று பார்ப்பவர்களுக்கே சந்தேகம் வரும்படியாக பேனர் வைத்தும், கேக் வெட்டியும் தளபதி ரசிகர்கள் கெத்து காட்டினர். இந்நிலையில் #Master என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. தற்போது வரை #Master ஹேஷ்டேக்கில் 3.43 மில்லியன் ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் தென்னிந்தியாவிலேயே சோசியல் மீடியாவில் அதிகமான முறை பதிவிடப்பட்ட ஹேஷ்டேக் என்ற பெருமை "மாஸ்டர்" படத்திற்கு கிடைத்துள்ளது. 

இதற்கு முன்னதாக தல அஜித்தின் "வலிமை" படம் குறித்த அறிவிப்பு வெளியான போது #Valimai ஹேஷ்டேக் டுவிட்டரில் செம்ம ட்ரெண்டிங்கானது. ஆனால் "வலிமை" ஹேஷ்டேக் 3.03 மில்லியன் பதிவுகளை மட்டுமே பெற்றதால், "மாஸ்டர்" ஹேஷ்டேக் அந்த சாதனையை சுலபமாக முறியடித்துள்ளது. பட ரிலீஸ்க்கு முன்பே விஜய் படம் செய்த சாதனையைப் பார்த்து டரியலான தல ரசிகர்கள் டுவிட்டரில் கட்டிப் புரளாத கொடுமையாக சண்டை போட்டு வருகின்றனர்.