Asianet News Tamil

வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள்... அஜித் பிறந்த நாளில் கதி கலங்கிப்போன தல ஃபேன்ஸ்..!

ஒருவழியாக அந்த ஹேஷ்டேக்கும் 2 மில்லியன் ட்வீட்டுகளுடன் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துவிட்டது. 

Vijay Fans Trend New Hastag At the time of  Thala Ajith Birthday
Author
Chennai, First Published May 1, 2020, 3:56 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தன்னம்பிக்கையால் உயர்ந்து தமிழ் சினிமாவின் தனி அடையாளமாக நிற்பவர் நடிகர் அஜித். சோசியல் மீடியா பக்கங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலும் கணக்கு இல்லாவிட்டாலும் டாப் ட்ரெண்டிங்கில் மிரட்டுவதை தல அஜித்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார், அரசியல் விவகாரங்களுக்கு கருத்து சொல்லமாட்டார். ஆனால் அது என்ன மேஜிக்கோ தெரியவில்லை அஜித்தின் அத்தனை சங்கதிகளும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகாமல் போவது இல்லை. 

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

மே ஒன்றாம் தேதியான இன்று தல அஜித் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொரோனா தொற்று பிரச்சனை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அஜித் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனால் தான் வலிமை படம் குறித்த அப்டேட் எதையும் இன்று வெளியிடப்போவதில்லை என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.

மற்ற சமயங்களில் எல்லாம் பிரபலங்கள் பலர் வந்து பஞ்சாயத்து பண்ணும் அளவிற்கு முட்டி கொண்ட, விஜய் - அஜித் ரசிகர்கள், திடீர் என ஒற்றுமையாய் மாறி, அஜித்துக்கு  தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தினர்.#NanbarAjith என்கிற ஹேஷ்டேக் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்களா இப்படி வாய் பிளக்கும் அளவிற்கு அந்த ஹேஷ்டேக் ஒருபுறம் ட்ரெண்டாகி வந்தது. 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

ஏதோ மூன்றாம் உலகப்போரே முடிவுக்கு வந்தது போல் தல - தளபதி ரசிகர்களின் ஒற்றுமையை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்சம் நேரம் கூட நீடிக்கவில்லை. தற்போது அஜித்திற்கு எதிராக களம் இறங்கியுள்ள விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக பார்த்த காரியம் ஒன்று ட்விட்டரையே திணறடித்துவிட்டது. 

காலை முதலே அஜித்திற்கு வாழ்த்து கூறி போர் அடித்துவிட்டது போலும்,  திடீரென மனம் மாறிய தளபதி ரசிகர்கள் கோலிவுட்டின் முகமே விஜய் தான் என்பதை பிரதிபலிக்கும் விதமாக #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

அதில் விஜய் ரசிகர்களுடன் விஜய் எடுத்த மாஸ்டர் செல்ஃபியில் இருந்து மாஸ் திருப்புமுனை கொடுத்த பூவே உனக்காக படம் வரை அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ஒருவழியாக அந்த ஹேஷ்டேக்கும் 2 மில்லியன் ட்வீட்டுகளுடன் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துவிட்டது. அதிலும் தல பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக அவரது ரசிகர்கள் உருவாக்கிய #HBDDearestThaIaAJITH என்ற ஹேஷ்டேக்கை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

இதுமட்டும் போதாது என்பது போல் அஜித் ரசிகர்களை மேலும் கடுப்பாக்குவதற்காக #Master,  #Mersal ஆகிய ஹேஷ்டேக்குகளும் அடுத்தடுத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இவங்க ட்விட்டரில் விதவிதமாய் ஹேஷ்டேக்குகளை தெறிக்கவிடுவதை பார்த்து நெட்டிசன்கள் தான் கதிகலங்கி போயுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios