தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 

நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் திரைப்படம் முக்கிய இடம் பிடித்தது. 2011ம் ஆண்டு தெலுங்கில் வெளியான இந்த திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து அசத்தியிருந்தார். ஆனால் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்ததாலும், சிம்பு, பிரபுதேவா என காதல் சர்ச்சைகளில் சிக்கியதாலும் நயன் சீதை வேடத்தில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதையும் படிங்க:  பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

இன்னொருவரின் கணவரை அபகரித்திருக்கும் நயன்தாரா எப்படி சீதையாக நடிக்கலாம் என தெலுங்கு அமைப்புகள் கொந்தளித்தன. அந்த சமயத்தில் சரியாக ஆந்திராவின் உரிய விருதான நந்தி விருது நயன்தாராவிற்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நயன் சீதையாக நடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தலைகுனிந்தனர். அந்த படமும் நல்ல படியாக வெளியானது, படத்தில் சீதையாகவே வாழ்ந்து காட்டிய நயன்தாராவை பலரும் புகழ்ந்து தள்ளினர்.விருதுகளையும் நயன்தாரா  அள்ளிக்குவித்தார்.

இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

இதனிடையே ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது அவரது நடிப்பை பார்த்து அசத்து போன படக்குழுவினர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இந்த பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காத நயன்தாரா ஷூட்டிங் ஸ்பார்ட்டிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் இருந்த இயக்குநர் பாபுவின் காலில் விழுந்து கதறி அழும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனக்கு கிடைத்த பாராட்டை எண்ணி ஆனந்த கண்ணீர் சிந்தும் நயன்தாராவின் வீடியோ இதோ...