விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா கோவில்களைப் பற்றி பேசியது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள் ஆனால் பள்ளிக்கூடம், மருத்துவமனையும் முக்கியமான ஒன்று தான். கோவில் உண்டியலில் காசு போடுவதை விட அதற்கு உதவுங்கள் என்று கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கண்டனங்கள் வலுத்துவருகின்றனர். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜோதிகாவின் சர்ச்சை பேச்சிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்திய சீமானை விஜயலட்சுமி வெளுத்து வாங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!

அதை மீண்டும் நினைவு கூர்ந்துள்ள விஜயலட்சுமி, சமூக சேவை செய்ய வேண்டும் என்று ஜோதிகா சொல்லி இருந்தால் நல்ல விஷய, தஞ்சாவூரில் மருத்துவமனை மோசமாக உள்ளதை மட்டும் ஜோதிகா சுட்டிக்காட்டாமல், பிரகதீஸ்வரர் கோவில் உடன் ஒப்பிட்டு கூறுவது மிகவும் தவறானது. இந்து மக்களின் பெரிய கோவில் அது, இந்துக்களுக்கு மட்டுமே அதன் மரியாதை தெரியும். ஆனால் சீமான் ஜோதிகாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார், இந்துக்களை எல்லாம் பார்த்தால் முட்டாள் மாதிரி தெரிகிறதா? என்று சகட்டுமேனிக்கு சாடியுள்ளார். 

இதையும் படிங்க:  டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

ஜோதிகாவிற்கு பஞ்சாயத்து செய்ய வந்த சீமான், நீங்கள் கோவிலை இழுக்காதீர்கள், இல்லையெல் மற்றவர்கள் உங்களுடைய தர்காவை இழுப்பார்கள் என்று ஏன் கூறவில்லை. அப்படின்னா நீங்க இந்துக்களுக்கு எதிரானவர் தானே, அப்புறம் எதுக்கு இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் சார்ந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க: “சூர்யா குடும்பம் மட்டும் பொழச்சா போதுமா?”... பொங்கி எழுந்த பிரபல தியேட்டர் உரிமையாளர்...!

என்னை நாம் தமிழர் கட்சியினர் கெட்ட வார்த்தைகளில் பேசிய போது, வாயை திறக்கவே இல்லை. ஆனால் இந்துக்களுக்கு எதிராக ஜோதிகா பேசியதற்கு மட்டும், ஏன் ஆதரவாக பேசுகிறீர்கள். எப்படி வேண்டுமானாலும் பேசி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என் வாழ்க்கையை பற்றி யோசிக்காத சீமான், சமூக சேவையை பற்றி மட்டும் ஏன் பேச வேண்டும். நான் சீமான் பெரிய கோவிலில் வழிபாடு நடத்தும் போதே நம்பிக்கை இல்லாததால் தான் 2 மாதங்களுக்கு முன்பே எச்சரித்தேன். 

உங்க அப்பா யாரு கர்த்தர் தானே அதனால் தான் உங்களுக்கு சிவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சனையை இந்துக்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.