விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கையாண்டுள்ளார்.

'முதல்வன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் நடிக்க இருந்த ஹீரோயின் யார் தெரியுமா? காரணம் இதுதான்!

விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். 'மழை பிடிக்காத மனிதன்' படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் படத்தில் இருந்து வெளியான 'தீரா மழை' மற்றும் இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் ’தேடியே போறேன்' ஆகிய இரண்டு பாடல்களுக்கும் இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Siragadikka Aasai: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு கிடைத்த ஸ்வீட் நியூஸ்!

ரிலீஸூக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Scroll to load tweet…