சத்யாவை கொன்றது போலவே, சதீஷையும் ரயில்முன் தள்ளி கொல்லுங்க.. நீதிபதியை கெஞ்சி கேட்ட விஜய் ஆண்டனி.
சத்யாவை கொன்று, சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை காலம் தாழ்த்தாமல், ரயில் முன் தள்ளி தண்டிக்க வேண்டும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். இதை சத்யாவின் சார்பில் தான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
சத்யாவை கொன்று, சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை காலம் தாழ்த்தாமல், ரயில் முன் தள்ளி தண்டிக்க வேண்டும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். இதை சத்யாவின் சார்பில் தான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23) இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வழக்கம்போல பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நேற்று திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை சதீஷ் பிடித்து தள்ளினார். அதில் சத்யா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் சதீஷை கைது செய்தனர். மகள் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாளாத சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: பெண் காவல் ஆய்வாளருடன் டிஎஸ்பி உல்லாசம்! - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
கைது செய்யப்பட்ட சதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சத்யாவை காதலித்து வந்ததாகவும், திடீரென தங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சத்யா தன்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதாகவும், அது தொடர்பாக அவரிடம் தான் பேச முயற்சித்ததாகவும், ஆனால் சத்யா தன்னைப் ஏற்க மறுத்ததாகவும், அந்த ஆத்திரத்தில் சத்யாவை ரயில் முன் பிடித்து தள்ளியதாகவும் சதீஷ் அதிர்ச்சி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: GP Muthu: பிரபல கிரிக்கெட் வீரரின் படத்தில் நடித்துள்ள ஜிபி முத்து..! வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த படுபாதக சதீஷை அதேபோல் ரயில் முன் தள்ளி கொலை செய்ய வேண்டும் என பலரும் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் சத்யாவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறிய சென்னை மாநகர காவல் ஆணையரிடம் எனது மகளை கொன்றவன் உயிரோடு இருக்க கூடாது என கண்ணீர் மல்க காலைப் பிடித்து கதறியுள்ளார்.
இந்நிலையில் திரைப்பட நடிகர், பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சத்யா கொலை விவகாரத்தில் ஆதங்கத்துடன் நீதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், சத்யாவை கொன்று, சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்கில் போடாமல் தயவுசெய்து உடனே விசாரித்து, ரயில்ல தள்ளிவிட்டு தண்டிக்கும்படி சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.