அவள உருகி உருகி காதலிச்ச.. அப்படி இருந்தும் எதுக்கு கொலை செய்தேன் தெரியுமா? சதீஷ் சொன்ன ஷாக் தகவல்..!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா 3வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன். அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் தலைமை காவலரின் மகள் சத்யா (20). தி.நகரில் தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷ் மற்றும் சத்யா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சத்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து இதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதையும் படிங்க;- ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
அதன் பிறகு சத்யா தனது காதலன் சதீஷ் உடனான நட்பை துண்டித்துள்ளார். இதற்கிடையே சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து நிச்சயம் செய்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். இந்த தகவல் அறிந்த காதலன் சதீஷ் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சத்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரயில் தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை நோக்கி ரயில் வந்து கொண்டிருந்த போது சத்யாவும், அவரது தோழியும் ரயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர். ஆத்திரத்தில் இருந்த சதீஷ், சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதில், சத்யா தண்டவாளத்தில் விழுந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலியை கொலை செய்து தலைமறைவாக இருந்து வந்த காதலனை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றி திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், 5 ஆண்டுகளாக இருவரும் உருகி உருகி காதலித்தோம். அவரது வீட்டிற்கு காதல் விவகாரம் தெரியவந்த நிலையில் கடந்த 7 மாதமாக சத்யா பேசாமல் காதலை முறித்து கொண்டார்.
கடந்த மே 20ம் தேதி தி.நகரில் உள்ள கல்லூரிக்குச் சென்று அவரை கட்டாயப்படுத்திப் பேச முற்பட்டபோது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக மாம்பழம் காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பலமுறை பேச முயற்சித்த போதும் அம்மா சொல்வதை தான் கேட்பேன் என்று சத்யா கூறியுள்ளார். மேலும், கல்லூரி செல்லும் நேரம் தனக்கு தெரியும் என்பதால் கட்டாயப்படுத்தி பேச முயற்சித்த போது தகராறு ஏற்பட்டது. இதனால், ரயில் முன் தள்ளிவிட்டேன். ரயில் முன் பாய்ந்து நானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன். அங்கிருந்த பயணிகள் என்னை பிடிக்க வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டேன். திட்டமிட்டே இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- அய்யோ! என் மகளுடன் என் சாமியும் போயிட்டாரே.. நான் இனி என்ன செய்வேன்.. கணவர் இறந்த செய்தியை அறிந்த மனைவி கதறல்
- Chennai College Student Sathya Murder
- Chennai college Student sathya murder case
- Chennai college student M Sathya
- Chennai college student M Sathya of Adambakkam
- Chennai student killed by stalker
- Sathya Priya Murder case
- Sathya's father dies in shock
- St. Thomas Mount murder
- chennai stalker kills girl
- girl pushed railway track
- sathya murdered in chennai