என் மகளைக் கொன்றவனை ஏதாவது செய்யுங்க.. கமிஷனர் காலில் விழுந்து கதறிய சத்யாவின் தாய்..!

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமியை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். 

College student murder.. Chennai Police Commissioner Shankar Jiwal condoles

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமியை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். 

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம்(47). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் சத்யா தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்ற இளைஞர் சத்யாவை ஓடும் மின்சார ரயில் முன்பு சத்யாவைத் தள்ளிவிட்டு கொலை செய்தார். மகள் இறந்த சோகம் தாங்க முடியாமல் ராமலட்சுமியின் கணவர் மாணிக்கமும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் மயில் துத்தநாகத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சத்யாவின் உடலும், அவரது தந்தை மாணிக்கத்தின் உடலும் சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். 

College student murder.. Chennai Police Commissioner Shankar Jiwal condoles

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைபாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்தியா இல்லத்திற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது, மாணிக்கத்தின் மனைவி  ராமலட்சுமி சங்கர் ஜிவாலின் காலை பிடித்துக்கொண்டு கதறி அழுதார். 

College student murder.. Chennai Police Commissioner Shankar Jiwal condoles

எங்கள் குடும்பத்தை போலீஸ்  குடும்பம் என்று சொல்வார்கள். ஆனால், எங்களின் மகளுக்கே அநியாயம் நடந்துவிட்டது. எனது மகளை கொன்றவனுக்கு எதாவது செய்ய வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மாணவியின் கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios