நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மார்கன்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சத்துடன் இந்த படம் உருவாகியுள்ளது.

விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் விஜய் ஆண்டனி. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக 2012-ம் ஆண்டு வெளியான ‘நான்’ என்கிற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வள்ளி மயில்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘சக்தி திருமகன்’ போன்ற படங்கள் சில காரணங்களால் வெளியாகாமல் தாமதமாகி வருகின்றன.



மார்கன் டிரெய்லர்

இந்த நிலையில் ‘மார்கன்’ படம் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை லியோ ஜான் பால் என்பவர் இயக்க, விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ தயாரித்துள்ளது. படம் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சைக்கோ கொலையாளி ஒருவன் அடுத்தடுத்து கொலைகளை செய்து, அதன் பிணத்தை கருப்பாக மாற்றி குப்பை தொட்டிகளில் வீசி வருகிறார். கொலைகாரனை பிடிக்கும் பொறுப்பு விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் அந்த சைக்கோ கொலையாளியை பிடித்தாரா என்பது தான் படத்தின் கதை என்பது டிரெய்லரை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது.

Maargan - Official Trailer | Vijay Antony | Ajay Dhishan | Leo John Paul