பிரேத பரிசோதனை முடிந்து மகளின் உடலை கண்ணீருடன் வீட்டுக்கு கொண்டு வந்த விஜய் ஆண்டனி - இறுதி சடங்கு எப்போ?
விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 16 வயதே ஆகும் மீராவின் இந்த விபரீத முடிவு பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீராவின் மறைவால் நடிகர் விஜய் ஆண்டனியும், அவரது குடும்பத்தினரும் மனமுடைந்து போகினர். அவர்களுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய தேனாம்பேட்டை போலீசார் உடற்கூறாய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று காலை 10 மணிக்கு விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படியுங்கள்... படிப்பினால் மனஅழுத்தம்... பிள்ளைங்கள free-யா விட்ருங்க - தற்கொலை குறித்த விஜய் ஆண்டனியின் பேச்சு..!
மகளின் உடலை கண்ணீருடன் சுமந்து வந்த விஜய் ஆண்டனி ஆம்புலன்ஸில் வைத்த காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து டிடிகெ சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு மீராவின் உடலை கொண்டு வந்தனர். அங்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக மீராவின் உடல் வைக்கப்பட்டு உள்ளது.
விஜய் ஆண்டனி மகள் மீராவின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என கூறப்படுகிறது. அதற்குள் அஞ்சலி செலுத்த வருபவர்கள் வீட்டில் வந்து அஞ்சலி செலுத்திக் கொள்ளுமாரு விஜய் ஆண்டனி தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மகளின் மரணத்தால் துவண்டு போய் உள்ள விஜய் ஆண்டனிக்கு பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அப்போ தந்தை... இப்போ மகள்! அடுத்தடுத்த தற்கொலைகளால் அதிர்ச்சியில் விஜய் ஆண்டனி