Vijay Antony daughter : அப்போ தந்தை... இப்போ மகள்! அடுத்தடுத்த தற்கொலைகளால் அதிர்ச்சியில் விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வரும் விஜய் ஆண்டனி, மகள் தற்கொலையால மனமுடைந்து போய் உள்ளார்.
vijay antony
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்தார் விஜய் ஆண்டனி. இதையடுத்து டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும் என தொடர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். இவர் இசையமைத்த நாக்கு முக்க பாடல் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
music director vijay antony
முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த நான் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, முழு நேர நடிகராக உருவெடுத்தார். தொடர்ந்து இவர் நடித்த சலீம், கொலைகாரன், பிச்சைக்காரன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெற்றியடைந்தன. அண்மையில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி.
vijay antony daughter
இப்படி கோலிவுட்டில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர், எடிட்டர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் விஜய் ஆண்டனி கடந்த ஜனவரி மாதம் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றபோது அங்கு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்த பின்னரே அவர் உயிர் பிழைத்தார்.
இதையும் படியுங்கள்... படிப்பினால் மனஅழுத்தம்... பிள்ளைங்கள free-யா விட்ருங்க - தற்கொலை குறித்த விஜய் ஆண்டனியின் பேச்சு..!
vijay antony daughter meera suicide
விபத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்துள்ள விஜய் ஆண்டனிக்கு அவரது மகள் மீராவின் தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து அவரது மகளின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.
vijay antony father suicide
விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் நிகழும் முதல் தற்கொலை இதுவல்ல. இதற்கு முன்னரே விஜய் ஆண்டனியில் தந்தையும் தற்கொலை செய்து தான் உயிரிழந்தாராம். அவருக்கு 7 வயது இருக்கும்போதே தந்தை தற்கொலை செய்துகொண்டாராம். தந்தையின் தற்கொலைக்கு பின்னர் தன் தாய் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும், தான் வாழ்வில் நிறைய கஷ்டங்களை பார்த்துவிட்டதாகவும் விஜய் ஆண்டனியே ஒரு பட விழாவில் பேசி இருக்கிறார். தந்தையை தொடர்ந்து தன் மகளும் தற்கொலை செய்துகொண்டது விஜய் ஆண்டனிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்... ” என் வலிமைக்கு காரணமான சக்தி..” தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி மனைவியின் பழைய ட்வீட் வைரல்..