மறுபடியும் முதல்ல இருந்தா..! மீண்டும் உலக பைக் சுற்றுலாவை தொடங்கிய அஜித் - இப்போ எந்த நாட்டுல தெரியுமா?
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மீண்டும் உலக பைக் சுற்றுலாவை தொடங்கி உள்ளார் அஜித்.
நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகிவிட்டது. அப்படத்தின் ரிலீசுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட அஜித்தின் ஏகே 62 திரைப்படம் இன்னும் தொடங்கியபாடில்லை. முதலில் இயக்குனர் மாற்றப்பட்டதால் தாமதமான இப்படம், பின்னர் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணி முடிவடையாததால் மேலும் தாமதமாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடையே இப்படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகாததால் இப்படம் டிராப் ஆக உள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், சந்திரமுகி 2 ஆடியோ லாஞ்சில் அதெல்லாம் வதந்தி எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்தார் தயாரிப்பாளர் சுபாஸ்கரன்.
இதையும் படியுங்கள்... Atlee Net Worth: 36 வயசு... இயக்கியது 5 படம் தான்!! அட்லீயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சரி எப்போ தான் ஷூட்டிங்க ஆரம்பிப்பாங்க என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அண்மையில் ஒரு குட் நியூஸ் வந்தது. அது என்னவென்றால் செப்டம்பர் மாத இறுதியில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. சரி இந்த முறை மிஸ் ஆகாது என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது மீண்டும் தன்னுடைய உலக பைக் சுற்றுலாவை தொடங்கி இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
அவர் தற்போது ஓமன் நாட்டில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிஎம்டபிள்யூ பைக்கில் அஜித் வலம் வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆகிப்போய் உள்ளனர். இருப்பினும் அஜித் ஓமன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்துகொள்வாரா அல்லது அரபு நாடுகள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இதையும் படியுங்கள்... சூடுபிடிக்கும் தளபதி 68 பிசினஸ்.. படத்துக்கு பெயரே வைக்கல அதற்குள் ஓடிடி உரிமை விற்பனை! அதுவும் இத்தனை கோடியா?