"என் பேத்திக்கு கல்யாணம்.. நான் ரொம்ப ஹாப்பி" அருண் விஜயோடு செம டான்ஸ் போட்ட விஜயகுமார் - வைரல் வீடியோ!
Actor Vijayakumar Grand Daughter Marriage : தமிழ் திரையுலகில் கடந்த 62 ஆண்டுகளுக்கும் மேலாக பலநூறு படங்களில் நடித்த மிகசிறந்த நடிகராக விளங்கி வருபவர் தான் விஜயகுமார்.
தமிழ் திரையுலகில் கடந்த 1961ம் ஆண்டு வெளியான "ஸ்ரீ வள்ளி" என்கின்ற திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகர் விஜயகுமார். கடந்த 62 ஆண்டுகளுக்கும் மேலாக பல நூறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற மாபெரும் நடிகராக விளங்கி வருகிறார்.
நடிகர் விஜயகுமாருக்கு கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவருடன் திருமணம் நடந்தது, அவருக்கும் விஜயகுமாருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், நடிகை கவிதா விஜயகுமார் மற்றும் நடிகர் அருண் விஜய். அதன் பிறகு பிரபல நடிகை மஞ்சுளாவை 1976 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டார்.
அந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் ப்ரீத்தா விஜயகுமார். நடிகை மஞ்சுளா மறைவுக்கு பிறகு தற்பொழுது தனது முதல் மனைவி முத்துக்கண்ணு அவர்களோடு வசித்து வரும் விஜயகுமாரின் மூத்த மகள்தான் அனிதா விஜயகுமார். இவர் ஒருவர் தான் திரைத்துறை பக்கமே வராமல் மருத்துவராக தனது வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருடைய மகள் தியா விஜயகுமாரின் திருமணம் சென்னையில் நடந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அருண் விஜயுடன் இணைந்து விஜயகுமார் நடனம் ஆடியுள்ள வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.