- Home
- Gallery
- படிக்காதவன் படத்தில் வரும் குட்டி ரஜினி.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? பிரபல சீரியல் நடிகையின் சகோதரராம்!
படிக்காதவன் படத்தில் வரும் குட்டி ரஜினி.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? பிரபல சீரியல் நடிகையின் சகோதரராம்!
Actor Master Suresh : குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தான் மாஸ்டர் சுரேஷ். ஆனால் அவர் ஒரு பிரபல சீரியல் நடிகையின் சகோதரர் என்பது பலர் அறியாத உண்மை.

Master Suresh
அன்றைய காலகட்டங்களில் தொடங்கி இப்போது வரை தமிழ் சினிமா உலகில் நாயகர்களின் பிளாஷ்பேக்கில் அவர்களுடைய முக சாயலை ஒத்த குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைப்பது இயல்பான ஒன்றுதான். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளமை பருவத்து குட்டி ரஜினிகாந்தாக நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் மாஸ்டர் சுரேஷ்.
Kaveri
சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன் படத்தில் மட்டுமல்லாமல் கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா மற்றும் பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இதுவரை இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
sujitha
இந்த நிலையில் அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த ஒரு புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் சமுத்திரம் திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட இவர், அதன் பிறகு அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இவர் பிரபல சீரியல் நடிகை சுஜிதாவின் அண்ணன் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.