Ram Gopal Varma : சர்ச்சைக்கு பெயர் பெற்ற அதே அளவிற்கு மிகசிறந்த படங்களை இயக்கி தேசிய விருது வென்ற ஒரு இயக்குனர் தான் ராம் கோபால் வர்மா. அவருடைய இயக்கத்தில் இவ்வாண்டு வெளியாக உள்ள திரைப்படம் தான் வியூகம்.

தெலுங்கு திரை உலகில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான "சிவா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ராம் கோபால் வர்மா. கடந்த 35 ஆண்டுகளாக தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, தயாரித்து வெற்றி கண்டு வரும் ஒருவர் தான் அவர். 

தமிழில் கடந்த 1993 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களுடைய இயக்கத்தில் உருவான "திருடா திருடா" திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்தது ராமகோபால் வர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ் எந்த படங்களிலும் அவர் பணியாற்றவில்லை என்றாலும் இன்றளவும் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரை உலகில் மிகவும் பிஸியான இயக்குனராக இருந்து வருகிறார். 

சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் லட்சங்களில் சம்பாதிக்கும் நடிகை சிம்ரன்.. ஆனா கொஞ்சம் காஸ்ட்லி தான்..

கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைகளை தனது திரைப்படங்களை வெளியிடும்போது ஏற்படுத்தி வரும் ராம் கோபால் வருமா அவர்கள் தற்பொழுது வியூகம் என்கின்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார். வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கம் போல தனது படத்திற்கான ப்ரமோஷன் பணிகளை அவர் துவங்கியுள்ளார். 

Scroll to load tweet…

அந்த படத்தில் நடித்துள்ள நடிகை ஒருவரோடு இணைந்து நைட்டி பாட்டில் எடுத்துக் கொண்ட வீடியோவை தற்போது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அவர். அந்த நடிகையோடு இணைந்து புகை பிடித்துக்கொண்டு, கையில் கிளாஸுடன் காணப்படும் அவரை கண்டு நெட்டிசன்கள் மீம்ஸ் மழை பொலிந்து வருகின்றனர்.

ரஜினி புரமோட் செய்தும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறி வரும் லால் சலாம்.. 2 நாள் வசூலே இவ்வளவு தானா?