விமல் நடிப்பில் இன்று ரிலீசாக இருந்த குலசாமி திரைப்படத்தின் ரிலீஸ் திடீரென தள்ளிவைக்கப்பட்டு புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விமல் நாயகனாக நடித்திருந்த திரைப்படம் குலசாமி. இப்படத்தை சரவண சக்தி என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட், மகாநதி சங்கர், வினோதினி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை எம்.ஐ.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
குலசாமி திரைப்படம் ஏப்ரல் 21-ந் தேதியான இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான புரமோஷன் பணிகளும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விமல் கலந்துகொள்ளாததற்கு நடிகர் அமீர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... PS2 புரமோஷனுக்காக விக்ரம் கட்டி வந்த காஸ்ட்லி வாட்ச்.... சிம்பிளா தான இருக்கு அதன் மதிப்பு இத்தனை லட்சமா..!
இந்நிலையில், இன்று ரிலீசாக இருந்த குலசாமி திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை. இதுகுறித்து படக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் குலசாமி திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று ரிலீசாகவில்லை என்றும், அதனால் இப்படத்தின் ரிலீசை வருகிற மே 5-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
விமல் நடித்த குலசாமி திரைப்படம் இன்று ரிலீசாகாவிட்டாலும், அவர் நடித்த மற்றொரு திரைப்படமான தெய்வ மச்சான் திரைப்படம் இன்று வெற்றிகரமாக ரிலீசாகி உள்ளது. இந்த படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் விமல் உடன் பால சரவணன், அனிதா சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... திரையரங்கில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த தசரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
