விஜய் நடித்து வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 80 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. 

விஜய் நடித்து வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 80 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. விஜய் நடித்து வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் வசூலை பற்றிய தகவல் நேற்று (ஜன.14) வெளியானது. அதன்படி, வாரிசு படத்தின் ஹிந்தி டப்பிங் 75-80% வசூலை கண்டுள்ளது.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மாவீரன் படக்குழு - வைரல் வீடியோ

இது பாலிவுட்டில் புதிதாக வெளியான குட்டே திரைப்ப்டத்தின் வசூலை முறியடித்துள்ளது. வெளியான முதல் நாளில் வெறும் 80 லட்ச ரூபாய் மட்டுமே வசூலித்த இந்த படம், நேற்று 1.50 கோடி ரூபாய் வசூலித்ததாக boxofficeindia.com இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விடுமுறை காரணமாக இந்த வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதன்முறையாக மகனின் கியூட்டான போட்டோவை வெளியிட்டு... மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

வாரிசு திரைப்படம் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில் தற்போது ஹிந்தியிலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான பாலிவுட் படமான குட்டே பெற்ற வசூலை வாரிசு திரைப்படம் எளிதாக முறியடித்துள்ளது. வரிசு படத்தின் மொத்த வசூல் தற்போது 2.25 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.