Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் இல்லத்தின் படுக்கையறை ரகசியங்கள்...வெளியேறிய வனிதாவின் போங்காட்டம்...

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு செக்ஸ் புகார்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் பிக்பாஸை விட்டு வெளியேறிய வனிதா விஜயகுமார்  இல்லத்தின் படுக்கை அறை ரகசியம் ஒன்றை வெளியிட்டு பகீர் கிளப்பியிருக்கிறார். 

vanitha reveals some big boss secretes
Author
Chennai, First Published Jul 17, 2019, 2:37 PM IST

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு செக்ஸ் புகார்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் பிக்பாஸை விட்டு வெளியேறிய வனிதா விஜயகுமார்  இல்லத்தின் படுக்கை அறை ரகசியம் ஒன்றை வெளியிட்டு பகீர் கிளப்பியிருக்கிறார். vanitha reveals some big boss secretes

 தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக திகழ்ந்த வனிதா விஜயகுமார், கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிக் பாஸ் போட்டியை பரபரப்பாக நகர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த வனிதா, தனது அதிரடியான நடவடிக்கையால் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கினாலும், பிக் பாஸ் போட்டியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், அவரது ஆட்டம் ரொம்ப ஓவராக போனதாலும், அவர் செய்வது அனைத்தும் நாடகம் என்பது மக்கள் புரிந்துக் கொண்டதாலும், அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள்.

 பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”பிக் பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல டிவியில் தான் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டும் லைட்டைப் போட்டுவிடுவார்கள். அந்த வெளிச்சத்தில் தான் உறங்க வேண்டும். வெளிச்சத்தில் யாருக்கும் சரியான உறக்கம் வராததால், சரியாக தூங்காமல் பலர் கஷ்டப்படுவார்கள்.”  என்று கூறியிருக்கிறார்.vanitha reveals some big boss secretes

 சரியான தூக்கம் இல்லை என்றால், அதுவும் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆனால், அது குறித்து கவலைப்படாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியார்களை இப்படி கொடுமைப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பலர் கூறி வருகிறார்கள். ஏற்கனவே, பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய வனிதா, தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை குறித்து பேசியிருப்பதால், அவர் மீது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் இல்லத்துக்கு வரும் வனிதா என்ற செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios