நடிகை வாணி போஜன், நடித்து சமீபத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தற்போது, முன்னணி வாரிசு நடிகர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: லெஜெண்ட் சரவணா அருளுடன் ஜோடி போடும் கீத்திகா திவாரி பாத் டவலில் கொடுத்த முரட்டு போஸ்..! இளகும் இளம் மனசு
 

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான, தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன், இதை தொடர்ந்து, லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். இவரின் அழகும் நடிப்பு திறமையும் இவருக்கு மிகவும் எளிதாக, வெள்ளித்திரை பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

 

அந்த வகையில், நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.  தமிழை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா தயாரித்து வரும், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் வைபவ் நடித்து வரும் லாக் அப் படத்திலும் நடித்து வருகிறார் வாணி போஜன்.

மேலும் செய்திகள்: போதும் இதோட நிறுத்திக்கோங்க ... மீரா சொன்ன பொய்? வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்திய சனம் ஷெட்டி!
 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, பிரபல நடிகர் பிரபுவின் மகன், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாணி போஜன் கமிட் ஆகியுள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் பிரசன்னா என்பவர் இயக்க இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: இதற்கு மேல் ரகசியத்தை சொன்னால் லோகேஷ் கனகராஜ் கொன்று விடுவார்..! பயந்து பேசிய மாளவிகா மோகன்!
 

தொடர்ந்து, வரிசையாக பட வாய்ப்புகளை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் வாணி போஜனின் இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை, பொறாமையில் பொசுங்க வைத்துள்ளது.