நடிகை மீரா மிதுன், வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் உள்ளது என, விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை விமர்சித்து பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி அதிரடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, மீராவை வெளுத்து வாங்கியுள்ளார்.

மீரா மிதுன், விஜய் பற்றியும் சூர்யா பற்றியும் வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்ததும், அதே போல் கமல், திரிஷா போன்றோர் ஜாதி ரீதியில் தான் தற்போது வரை, தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளனர் என்று கூறினார்.

நடிகர் சூர்யா பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும், ஒரு சாதாரணக் காட்சிக்கு கூட 20 டேக்குகள் வாங்குவார் என்றும், ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து போன் மற்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டுவதாகவும், கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் உங்க மனைவி, குழந்தைகளுக்கு இப்படி நடந்தால் ஏற்பீர்களா... என் நெம்பர் பல குரூப்களுக்கு பகிரப்படுகிறது. எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யா தான் பொறுப்பு என்று ட்விட்டரில் கொந்தளித்தார் .

இந்நிலையில் மீராவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சனம் ஷெட்டி, மிகவும் ஆதங்கத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து இவர் பேசியுள்ளதாவது... விஜய்யின் தந்தை இயக்குனர் என்பதால் அறிமுகம் மிகவும் எளிதாக கிடைத்திருந்தாலும், இவரெல்லாம் ஒரு நடிகரா என, பல விமர்சனங்கள் வந்தது. அதையெல்லாம் கடந்து அவர் தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் தான் நடிகர் என்பதை நிரூபித்து, பல லட்ச ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

எனவே இப்படி எல்லாம் பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் மீரா என கூறியுள்ளார். மேலும் நீங்கள் இப்படி பேசுவதால் விஜய் உங்களிடம் ஆன்லைன் கால் வந்து பேசினார் என சொல்கிறீர்கள் எதாவது நம்பும் படி பேசுங்கள் என, நீங்கள் பேசுவதை அவர் கண்டுக்கவே மாட்டார். உங்களுக்கு பதில் சொல்ல நான் மட்டும் போதும். நீங்கள் தான் நெகடிவ் விமர்சனத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என சனம் ஷெட்டி மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்துள்ள வீடியோவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.