Valimai Box Office: இரண்டு வாரங்களை கடந்தும் மவுஸு குறையாத அஜித்தின் வலிமை....சென்னையில் மாஸ் காட்டும் வசூல்.!
Valimai Box Office: அஜித் ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்பிற்கு பிறகு, வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது. மேலும், இரண்டு வாரங்களை கடந்தும் மவுஸு குறையாத அஜித்தின் வலிமை, வசூலில்
சென்னையில் மாஸ் காட்டி வருகிறது.
அஜித் ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்பிற்கு பிறகு, வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது. போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள வலிமை திரைப்படத்தில், அஜித்திற்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
நட்சத்திர பட்டாளம்:
நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர், எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.மேலும் குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
200 கோடியை தாண்டிய அஜித்தின் வலிமை:
முதல் மூன்று நாட்கள் ரசிகர்கள் மட்டும் பார்க்கும் படமாக இருந்த நிலையில், அதற்கு பிறகு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை பெற்றது. அதனை பிறகு, ஒரு வாரம் கழித்து படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
இந்தப் படம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், கேரளா உட்பட வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். மேலும், இப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்த விவரமும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
சென்னை வசூல் விவரம்:
இந்நிலையில் ,சென்னையில் இருந்து மட்டும் முதல் நாள் 1.82 கோடி வசூல் செய்திருந்த நிலையில், தற்போது 16 நாள் முடிவில் சென்னையில் மட்டும் படம் ரூ. 9.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு பிறகு பசென்னையில் மட்டும் படம் ரூ. 10 கோடியை தாண்டிவிடும் என்கின்றனர்.