Valimai Box Office: பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த வலிமை திரைப்படம் உலகம் எங்கிலும், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. 

போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர், எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏற்று கட்சிதமாக நடித்துள்ளார். 

இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.

ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. வலிமை, முதல் நாளிலேயே ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்திருந்தது. சென்னையில் இருந்து மட்டும் 1.82 கோடி வசூல் செய்திருந்தது. இந்தப் படம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், கேரளா உட்பட வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வெளியான முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை பெற்றது. மேலும், இப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்த விவரமும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் தற்போது வரை, படம் ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளதாம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 136 கோடி வசூலித்திருக்கிறது. இந்த தகவல் மனோபாலா விஜயபாஸ்கர் என்பவரால் ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...Women self defense tips: பெண்கள் ஆபத்து நேரத்தில் தங்களை தற்காத்து கொள்வது எப்படி..? ஈஸியான 5 வழிமுறைகள்..!

இப்போது அஜித் தனது 61வது படத்திற்காக உடல் எடை குறைத்து தயாராகி வரும் நிலையில், அவரது வலிமை திரைப்படம் செம வசூல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…