'மாமன்னன்' படத்தின் வெற்றியை, நடிகரும் - அமைச்சருமான உதயநிதி மனைவி கிருத்திகா மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
உதயநிதி நடிப்பில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'மாமன்னன்' படம், திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் வெற்றியை மனைவி கிருத்திகா மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் உதயநிதி. இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தன்னுடைய மூன்றாவது படமான 'மாமன்னன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், ஹார்டிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் நாயகனான உதயநிதிக்கு இப்படம் ஒரு மாஸ்டர் பீஸ் என கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். ஒரு தயாரிப்பாளராக இருந்து, பின் நடிகராக மாறி சில வெற்றி படங்களில் உதயநிதி நடித்துள்ள போதிலும், 'மாமன்னன்' பெற்று தந்த, பெயரையும் - புகழையும் மற்ற படங்கள் இதுவரை அவருக்கு பெற்றுத்தரவில்லை.

திமுகவிலும் இன்றுவரை சாதி பாகுபாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது; பா. ரஞ்சித் டுவீட்!!
விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும்... இந்த படத்தால் தன்னுடைய வெற்றியை உறுதி செய்துள்ளார் உதயநிதி. படம் வெளியானது முதலே, படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள். நேற்றைய தினம் கூட, இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பல லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக கொடுத்து... சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தார் உதயநிதி. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து, உதயநிதி 'மாமன்னன்' படத்தின் வெற்றியை... மனைவி கிருத்திகா, நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜுடன் கேக் வெட்டி 'கொண்டாடிய புதிய வீடியோக்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. உதயநிதி, தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டதால், இதுவே இவரது கடைசி திரைப்படம் என வெளிப்படையாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மாமன்னன்' படத்தில் உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடித்துள்ளார். வில்லனாக பகத் பாசில் படு மாஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசும்படியான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தன்னைக்கென தனி இடத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
