Thalapathy Vijay : தளபதி விஜய், பிரபல நடிகை ராதிகாவின் இல்லத்திற்கு சென்ற பொழுது, அங்கு நடந்த ஒரு சம்பவம் குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதி விஜய் பார்ப்பதற்கு மிகவும் அமைதியான ஒரு மனிதரைப் போலத்தான் தெரிவார், ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் அலப்பறைகள் குறித்து பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். உதாரணமாக, அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல நடிகர் ஜெய். தான் நடிகனாக "பகவதி" திரைப்படத்தில் அறிமுகமான அனுபவம் குறித்து பேசியிருந்தார். 

ஆரம்பத்தில் தனக்கு பெரிய அளவில் நடிக்க வரவில்லை என்றும், படிப்படியாக நடிப்பு கற்றுக்கொண்டு, அந்த பகவதி படத்தில் தன்னுடைய இறுதி காட்சி படமாக்கப்படும் போது, தான் சிறப்பாக நடித்ததற்கு அங்கிருந்த டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தன்னை பாராட்டியதாகவும் கூறினார். ஆனால் அருகில் நின்று கொண்டிருந்த விஜயோ, "படமே முடிய போகுது" என்று சொல்லி அவரை கலாய்த்ததை, கூறி மகிழ்ந்தார். 

Atlee Dance : ஆனந்த் - ராதிகா சங்கீத் : விக்கி கௌஷலுடன் வைரல் பாடலுக்கு கூலாக டான்ஸ் ஆடும் அட்லீ.. வீடியோ..

ஆகவே தளபதி விஜய் பார்க்க அமைதியாக இருந்தாலும், அவரும் கலகலப்பாக பலருடனும் பேசி பழகும் சுபாவம் உடையவர் தான். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் சரத்குமார் அவர்களுடைய இல்லத்திற்கு அவர் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த ராதிகா சரத்குமாரின் மகன் ராகுல், தளபதி விஜயை பார்த்ததும் மகிழ்ச்சியில் தனது தந்தைக்கு போன் செய்திருக்கிறார். 

அப்போது விஜயிடம் பேசிய சரத்குமார், நான் வீட்டில் இல்லை, கொஞ்சம் நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள் நான் விரைவில் வந்துவிடுகிறேன் என்று கூற, "நான் என்ன உங்களையா பார்க்க வந்தேன்? நான் ராகுலை சந்தித்து, அவனோடு சில நேரம் விளையாடிவிட்டு செல்லலாம் என்று தான் வந்தேன்" என்று கூறி சாரத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

இந்த சம்பவம் நடந்த பொழுது ராதிகா சரத்குமாரின் மகன் ராகுல் மிகவும் சிறு பையன் என்று கூறப்படுகிறது. இயல்பிலேயே ராகுல் மீது அதிகம் பாசம் கொண்ட விஜய், நேரில் சென்று அன்று அவரை சந்தித்து பேசியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தான், பல ஆண்டுகள் கழித்து சரத்குமார் "வாரிசு" என்ற திரைப்படத்தில் தளபதி விஜயோடு இணைந்து நடித்தார். 

அப்பொழுது ஓய்வு நேரத்தில் விஜயிடம் பேசிக்கொண்டிருந்த சரத்குமார், தன்னுடைய மகன் பெண் தோழிகளை குறித்தெல்லாம் பேச ஆரம்பித்து விட்டான் என்று கூற, அவரை இடைமறித்து பேசிய தளபதி விஜய், "சார் இந்த வயதில் இதெல்லாம் சகஜம், அதை எல்லாம் கண்டுக்காதீங்க" என்று கேசுவலாக கூறி சென்றதை சரத்குமார் அவர்களும் நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கு படம் பிரம்மாண்டம்.. பல கோடிகளில் சம்பளம்.. "கோலிவுட்டின் ஸ்பில்பேர்க்" சங்கர் - Net Worth எவ்வளவு?