நடிகர் விக்கி கௌஷல் உடன் இணைந்து ​​'ஜவான்' இயக்குனர் அட்லீ,  தௌபா தௌபா பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் தற்போது பேட் நியூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் திவாரி இயக்கி உள்ள இந்த படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘தௌபா தௌபா’ பாடல் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில். சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விக்கி கௌஷல் உடன் இணைந்து ​​'ஜவான்' இயக்குனர் அட்லீ வைரல் பாடல் தௌபா தௌபா பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது விக்கி கௌஷல், அட்லீ மற்றும் நடிகை திஷா பதானிக்கு தனது வைரல் டான்ஸ் ஸ்டெப்ஸ் கற்றுக்கொடுக்கிறார்.

View post on Instagram

கடந்த வார இறுதியில் மும்பையில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் சங்கீத் நிகழ்ச்சியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. வீடியோவில், சாரா அலி கான், அர்ஜுன் கபூர் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட பிற பிரபலங்களும் விக்கியைப் பின்தொடர்ந்து 'தௌபா தௌபா' பாடலுக்கு நடனமாடுவதை பார்க்க முடிகிறது.

ஆனந்த் மற்றும் ராதிகாவின் சங்கீத் கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) நடந்தது. மாதுரி தீட்சித், ஆலியா பட், ஷாஹித் கபூர், ரன்பீர் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, தீபிகா படுகோன், திஷா பதானி, மௌனி ராய், ஜான்வி கபூர், சாரா அலி கான், விக்கி கௌஷல் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்

அம்பானி வீட்டு திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள், தொழில்துறை தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், அர்ஜுன் கபூர், ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, ஷாஹித் கபூர், விக்கி கௌஷல் உள்ளிட்ட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.நாளை தொடங்கும் திருமண விழா 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. நாளை திருமணமும், ஜூலை 13 அன்று ஆசீர்வாத விழாவும், ஜூலை 14 அன்று திருமண வரவேற்பும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானிக்கும். என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா வீரேன் மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்சண்டிற்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் 2-வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.