கார்த்தியின் அடுத்த திட்டம் ..வெளிநாட்டு பெயரில் இறங்க முடிவாம்..
இதில் வித்தியாசமான தோற்றத்தில் நாயகன் காணப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் கார்த்தி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் கார்த்தி வாரிசு நடிகரான இவர் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதலில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் வந்த இவருக்கு அமீர் நாயகனுக்கான அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தார். சமீபத்தில் கார்த்தியின் விருமன் படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதில் சங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.
மேலும் தற்போது மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் வந்தியதேவனாக நடித்துள்ளார் கார்த்தி இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கான உள்ளது. சோழ வம்சத்தை பற்றிய காவிய நாடகமான இதில் ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் உள்ளிட்டோரூம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பொன்னியின் செல்வனில் கார்த்தியின் ரோல் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு....டூ பீஸில் பார்த்தவுடன் பக்கென்றாக்கும் பாலிவுட் பிரபலம்...கிக் போட்டோஸ் இதோ !
இந்த படத்தோடு பி.எஸ் .மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்திலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்த படமும் நீண்ட கால காத்திருப்பதற்குப் பிறகு வெளியாக உள்ளது. இதில் ராசி கண்ணா நாயகியாக நடிக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு சர்தார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...இனி... டாக்டர் U1... கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
இதற்கிடையே கார்த்தியின் அடுத்த திட்டம் குறித்தான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இயக்குனர் ராஜு முருகன் அடுத்த படத்தை கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே இயக்குனர் மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் நாயகன் காணப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் கார்த்தி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய திட்டத்தின் டைட்டில் குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.
இதையும் படியுங்கள்... அந்த விஷயத்தில் விக்கி ‘லக்கி’ இல்லை... நயனின் கணவர் பற்றி ஓப்பனாக பேசிய சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி
அதாவது கார்த்தியின் அடுத்த படத்திற்கு ஜப்பான் என பெயரிடப்பட உள்ளதாம். இந்த படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அவர் மறுத்துவிட்ட காரணத்தால் டோலிவுட் நடிகர் சுனில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என பேசப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு வரும் இந்த படத்திற்கான முன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.