பிக் பாஸ் ஐஸ்வர்யா போலவெ இருக்கும் பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ;

சினிமாவில் நடித்த போது கூட நல்லபெயர் வாங்கிய பலரும் கூட பிக் பாஸ் வீட்டிற்குள் போன பிறகு தங்கள் இமேஜை டேமேஜ் செய்துகொள்வார்கள். 

அந்த லிஸ்டில் இப்போது முதலிடத்தில் இருப்பது பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் பெயர் தான். ஆரம்பத்தில் க்யூட்டாக இருந்த இவர் போகப்போக சர்வாதிகாரியாக மாறி அராஜகம் செய்ய ஆரம்பித்துவிட்டார். இதனால் இவர் எப்போது எலிமினேஷன் லிஸ்டுக்கு வருவார் என ஆவலுடன் தற்போது காத்திருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

ஆனால் பிக் பாஸ் அதற்கெல்லாம் அசைகிற ஆளா. நேக்காக ஒவ்வொருமுறையும் இவரை காப்பாற்றிவிடுகிறார். இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேறு ஐஸ்வர்யாவின் அம்மா வேறு பாலாஜியிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதனால் ஐஸ்வர்யாவை பாலாஜி மன்னித்தது போல மக்களும் மன்னிக்க வேண்டும் என்பது பிக் பாஸின் எண்ணமோ என சந்தேகத்தில் இருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

 

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சமீபத்தில் ஐஸ்வர்யா சர்வாதிகாரில் செய்த அட்டூழியங்கள் மிக பிரபலமாகி இருந்தன. இதனால் அவர் பற்றி டப் ஸ்மேஷ்கள் அதிகம் வந்திருந்தன. அதில் ஒரு பெண் ஐஸ்வர்யா போலவே பேசி இருக்கிறார். 

அவர் அப்படி பேசி இருப்பது அல்ல அதிசயம். அவரே பிக் பாஸ் ஐஸ்வர்யா போல இருப்பது தான் அதிசயம். அதிலும் அவர் ஐஸ்வர்யாவின் வசனங்களை திரும்பி நின்று பேசும் போது அப்படியே ஐஸ்வர்யா தான். இதனால் தற்போது இந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.