லாக் டவுனுக்கு முன்னதாகவே கனடாவில் இருந்து திரும்பிவிட்டதால் அப்போது முதல் தற்போது வரை சுமார் 3 மாதங்களாக தனது சென்னை நீலங்கரை பங்களாவிலேயே முடங்கியுள்ளார் விஜய்.

நடிகர் விஜய் எப்போதும் ஆர்ப்பாட்டம் இல்லாத நபர். சூட்டிங் செல்வது முதல் திரும்பி வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார். ரஜினியை அனைத்து வழிகளிலும் பின்பற்றும் விஜய் ரசிகர்களுடனான தொடர்பில் மட்டும் ரஜினியில் இருந்து வேறுபடுவார். ரஜினி ஒரு காலத்தில் சூட்டிங் புறப்படுகிறார் என்றார் அவர் வீட்டு முன்பு திருவிழாக்கூட்டம் இருக்கும். இதனை தினமும் பார்க்கலாம். மாதத்தில் ஒரு ஞாயிறு அன்று ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கமும் ரஜினிக்கு இருந்தது.

ஆனால் விஜய் அப்படி இல்லை, அவர் ரசிகர்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்பதற்காகவே சென்னையில் இருந்து நீலங்கரைக்கு மாறினார். அவர் எதிர்பார்த்த அமைதியான வாழ்வை அங்கு வாழ்ந்து வருகிறார். அதிலும் இந்த லாக் டவுன் கால கட்டத்திலும் அவரது வாழ்வு மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் லாக் டவுன் நீட்டிப்பு தான் திடீர் பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள். ஏற்கனவே விஜயை வைத்து படம் எடுத்த தேனான்டாள் பிலிம்ஸ் அடுத்த படத்தை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

சர்கார் படத்தில் சில நஷ்டங்களை கூறி மறுபடியும் விஜயிடம் சன் பிக்சர்ஸ் கால்ஷீட் வாங்கிவிட்டது. இந்த நிலையில் தேனான்டாள் பிலிம்ஸ் விஜய் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் 2017ம் ஆண்டு வெளியான மெர்சல் படத்தின் கணக்கு வழக்குகளை எடுத்துக் கொண்டு விஜயை சந்திக்க தயாராகி வருவதாக சொல்கிறார்கள். மீண்டும் விஜய் கால்ஷீ கிடைக்கவில்லை என்றால், கணக்கு வழக்குகளை அம்பலப்படுத்தி விஜயின் மார்க்கெட் என்ன என்பதை சொல்லலாம் என்று தேனான்டாள் பிலிம்சுக்கு சிலர் யோசனை கூறி வருகிறார்கள்.

இந்த விஷயம் விஜய் காதுகளுக்கு சென்ற நிலையில் வழக்கம் போல் படத்தில் நடிப்பது தான் என் வேலை, பிசினஸ் பிரச்சனைக்கு என்னிடம் வரக்கூடாது என்கிற ரீதியில் விஜய் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் தற்போது வரை வெளியாகாமல் இருக்கும் மாஸ்டர் படம் தான் விஜய்க்கு பெரிய தலைவலியாக இருப்பதாக சொல்கிறார்கள். திரையரங்குகள் செப்டம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். தீபாவளிக்கு கூட திரையரங்குகள் செயல்படுமா? என்பதில் அரசு தெளிவில்லாமல் இருக்கிறது. இதனால் எடுத்து தயாராக உள்ள படங்களை வந்த விலைக்கு தயாரிப்பு நிறுவனங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றன.

இதையும் படிங்க:  கருப்பு, வெள்ளை போட்டோவில் கண்டபடி கவர்ச்சி காட்டும் பிரபல நடிகை... திக்குமுக்காட வைக்கும் ஹாட் கிளிக்ஸ்...!

இந்த நிலையில் மெர்சல் முடங்கியுள்ளதால் தயாரிப்பாளர் கடும் நிதிப்பிரச்சனைக்கு ஆளாகியுள்ளதாக சொல்கிறார்கள். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு படமே வேண்டாம் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று நச்சரிக்கிறார்கள். இந்த நிலையில் தான் மாஸ்டர் படத்தை நல்ல விலைக்கு பிரபல ஓடிடி தளம் கோருவதாக சொல்கிறார்கள். ஆனால் விஜய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் எப்படியாவது விஜயை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று குடைசல் கொடுப்பதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!

இதற்கிடையே நெருக்கமாக இருந்த மேனஜர் ஜெகதீஷை விஜய் இனி வரவேண்டாம் என்று கூறிவிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதன் பின்னணியில், பிரபல ஓடிடி தளத்துடன் மாஸ்டர் டிஜிட்டல் ரைட்ஸ் குறித்து விஜயின் கவனத்திற்கே வராமல் ஜெகதீஷ் பேசியது தான் காரணம் என்று சொல்கிறார்கள். மேலும் விஜயின் மார்க்கெட் விவரங்களையும் அந்த ஓடிடி தள நிர்வாகத்திடம் ஜெகதீஷ் கூறிவிட்டதாகவும் சொல்கறிர்கள். இப்படி மெர்சல் தொடங்கி மாஸ்டர் வரை பிரச்சனையாகியுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் – முருகதாசுடன் இணையும் படத்திற்கான கதைக்கு ஓகே சொல்லிவிட்டு விஜய் காத்திருக்கிறாராம்.