கப்பல் போன்ற மிகப்பெரிய காரில் இருந்து தளபதி விஜய் இறங்கி வருகிறார். சமீபத்திய வீடியோ அல்ல இது என்றாலும் இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழில் முன்னணிநாயகராக வலம் வரும் விஜயின் புகைப்படமோ வீடியோவோ எதுவாகினும் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் தற்போது அவர்களிடம் கிடைத்துள்ள ஒரு புதிய வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர். அதில் கப்பல் போன்ற மிகப்பெரிய காரில் இருந்து தளபதி விஜய் இறங்கி வருகிறார். சமீபத்திய வீடியோ அல்ல இது என்றாலும் இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...அடக்கடவுளே! சாய் பல்லவியின் கார்கி படத்தின் மொத்த வசூலே இவ்வளவு தானா?
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள பக்கத்தில் யு எஸ் ஏ- வில் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் வீடியோ பதிவானது தளபதியின் முந்தைய வெளிநாட்டு படப்பிடிப்பின் போது இருக்கலாம் என தெரிகிறது. டீசர்ட் அணிந்து மிகவும் இளைமையாக காட்சியளிக்கிறார் விஜய். தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாக பரவுகிறது இந்த காணொளி.
டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் மிதமான வரவேற்புகளை பெற்றதை அடுத்து, தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் குறித்த மூன்று போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில்ராஜ் என்பவர் தயாரித்து வருகிறார் இதில் புஷ்பாநாயகி ராஸ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..பிக்பாஸ் சென்ட்ராயன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
ஹைதராபாத், சென்னை என படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதாஸ், ஸ்ரீகாந்த் குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பிரபலங்களின் நடித்து வருகின்றனர்.

சென்டிமென்ட் கலந்த என்டர்டைன்மெண்டாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் 90'ஸ் நாயகன் போல நடிக்கிறார். இதில் இருந்து வெளியான போஸ்டர்களில் விஜய் மிகவும் யூத்தான தோற்றத்தில் காணப்படுகிறார். பீஸ்டில் பிளாக் பேப்பர் ஸ்டைலில் இருந்த தளபதி, இந்த படத்தில் இளமையாக இருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையே படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வீடியோவும் சமூக வலைதளத்தை சுற்றி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...வரவேற்பை பெற்று வரும் இரவின் நிழல்..கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
