பிக்பாஸ் சென்ட்ராயன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
கார்த்தியின் சுல்தான் படத்தில் தோன்றிய சென்ட்ராயன் நாயகனுடன் இருக்கும் ரவுடிகளில் ஒருவராக நடித்திருப்பார். தற்போது சென்ட்ராயன் தனது இரண்டு மகன்கள் மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Sendrayan
பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் சென்ட்ராயன். முன்னதாக பல வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார். வெற்றிமாறனின் பொல்லாதவன் மூலம் நடிகராக அறிமுகமான இவர் மூடர்கூடம், புதிய நியமம், மெட்ரோ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நகைச்சுவை வேடத்திலும் தோன்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...வரவேற்பை பெற்று வரும் இரவின் நிழல்..கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
Sendrayan
2018 ஆம் ஆண்டு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸில் சென்ட்ராயன் போட்டியாளராக பங்கேற்றார். இறுதி போட்டியாளராக இவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84வது நாளில் வெளியேற்றப்பட்டார். இந்த ஷோ இவருக்கு சரியான திருப்பு முனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...ஸ்டைல் வாக் போட்ட விஜய்..வாரிசு சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை லீக் செய்த ரசிகர்கள்..
Sendrayan
இருந்தும் பெரிதாக முன்னேற்றம் இல்லை என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் சென்ட்ராயன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார். அதோடு தனக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனக் கூறி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...இறுதி கட்டத்தில் குக் வித் கோமாளி 3..அந்த மூன்று வின்னர்ஸ் யார் தெரியுமா?
Sendrayan
பின்னர் உறவினர்கள் சந்திக்கும் நிகழ்வின் போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த தனது மனைவியை தூக்கி கொண்டாடிய சென்ட்ராயன் தான் அப்பா ஆகப் போவதாகக் கூறி மகிழ்ச்சியில் அழுத காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒன்றாக உள்ளது.
Sendrayan
கார்த்தியின் சுல்தான் படத்தில் தோன்றிய சென்ட்ராயன் இறுதியாக கொம்பு வச்ச சிங்கம் டா படத்தில் தோன்றியுள்ளார். இந்நிலையில் சென்ட்ராயன் தனது இரண்டு மகன்கள் மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.