அடக்கடவுளே! சாய் பல்லவியின் கார்கி படத்தின் மொத்த வசூலே இவ்வளவு தானா?
படத்தின் வெளியீட்டு உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியது. இதற்கான அறிவிப்பையும் சூர்யா வெளியிட்டு இருந்தார். தற்போது படத்தில் வசூல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

gargi
பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சர் ஆக அறிமுகமான சாய்பல்லவி தற்போது தென்னிந்திய நாயகிகளின் முன்னணி வரிசையில் உள்ளார். தனுஷுடன் ரவுடி பேபி பாடலுக்கு பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற சாய்பல்லவி தற்போது கார்கி என்னும் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..பிக்பாஸ் சென்ட்ராயன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை பிளாக்கி, ஜெனி & மை லெஃப்ட் ஃபுட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது இதற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 15 ஆம் தேதி திரையிடப்பட்டது.
பள்ளி ஆசிரியராக இருக்கும் கார்கியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்கின்றனர். பின்னர் ஒரு குழந்தையை தாக்கியதாக கூறி அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தனது தந்தையை நிரப்பராதி என உறுதி செய்ய கார்கி போராட்டத்தில் இறங்குகிறார்.
மேலும் செய்திகளுக்கு...வரவேற்பை பெற்று வரும் இரவின் நிழல்..கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
அப்போது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சமூகத்தால் மூலம் பல இன்னல்கள் வருகின்றன. இதையடுத்து இவர்களுக்கு உதவிய குடும்ப நண்பர் வழக்கறிஞரும் ஜெயப்பிரகாஷும் பின்வாங்க, செய்வதறியாது நாயகி நிற்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...ஸ்டைல் வாக் போட்ட விஜய்..வாரிசு சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை லீக் செய்த ரசிகர்கள்..
பின்னர் வெற்றிகளை காணாத வக்கீலாக சித்தரிக்கப்படும் காலி வெங்கட்டின் உதவியுடன் கார்கி எவ்வாறு தனது தந்தையை மீட்கிறார் என்பதே இந்த படத்தின் கதையாகும். இதில் சாய் பல்லவியுடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி , கவிதாலயா கிருஷ்ணன், சரவணன், சுதா என பல நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டு உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியது. இதற்கான அறிவிப்பையும் சூர்யா வெளியிட்டு இருந்தார். தற்போது படத்தில் வசூல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் மொத்தம் 4 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.