பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது.  இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

 

இதையும் படிங்க: நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

யுவன் சங்கர் ராஜா இசையில் பட்டையைக் கிளப்பிய இந்த பாடலை இதுவரை யூ-டியூப்பில் 90 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் தென்னிந்திய மொழிகளிலேயே அதிக பார்வைகளைகளை கொண்ட பாடல் என்னும் சாதனைய படைத்திருக்கிறது “ரவுடி பேபி”. இந்நிலையில் சத்தமே இல்லாமல் விஜய் பட பாடல் செய்த சாதனையை அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

தளபதி விஜய் - அட்லி கூட்டணியில் முதல் முறையாக வெளியான திரைப்படம் தெறி. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு ஹிட்டானது. இந்த படத்தின் ஆல்பம் யூடியூபில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 2016ம் ஆண்டிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பிடித்தது. இந்த படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான “ஈனா மீனா டீகா” பாடல் யூ-டியூப்பில் வெற்றிகரமாக 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மீனாவின் மகள் நைனிகாவின் அறிமுக பாடமான இதில் கியூட் ரியாக்‌ஷன்கள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். விஜய்யை விட இந்த பாடலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது நைனிகா தான் என்றால் அது மிகையாகாது.