நடிகர் சஞ்சய் தத் இன்று 63 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்த கிலிம்ஸி வீடியோவை 'லியோ' படக்குழு வெளியிட்டுள்ளது. 

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீப காலமாக, தென்னிந்திய திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக இவர், நடித்த KGF திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து... இவரை தென்னிந்திய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சஞ்சய் தத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் விஜயின் தந்தையாகவும் சஞ்சய் தத் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு அவன் கதாபாத்திரத்தை ரிவீல் செய்யும் விதமாக, 'ஆண்டனி தாஸ்' கேரக்டரின் கிளிம்ப்ஸி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் வெகேஷன்... கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்! வைரலாகும் போட்டோஸ்!

சஞ்சய் தத்தின் தோற்றம் ஸ்டைலிஷாகவும், முரட்டுத்தனமாகவும் உள்ளது. மேலும் கழுகோடு சஞ்சய் தத்தை ஒப்பிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆண்டனி தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள நிலையில், இந்த கிலிம்ஸி வீடியோ வெளியான சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

'தல' தோனியின் முதல் படம் டக் அவுட்டா.. பிக்கப்பா..? 'LGM' முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்!

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லலித் குமார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மூலம் தயாரித்துள்ளார். மனோஜ் பரமசிவம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.LEO - Glimpse of Antony Das | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander