வெளிநாட்டில் வெகேஷன்... கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்! வைரலாகும் போட்டோஸ்!
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் கமிட் ஆன வேகத்தில், இந்த சீரியலில் இருந்து விலகிய நடிகை கவிதா கவுடா, வெளிநாட்டில் வெக்கேஷன் நாட்களை குடும்பத்துடன் கழிக்கும் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
பெங்களூரை சேர்ந்த நடிகை கவிதா கவுடா, தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, மஹாபாரதம் தொடர் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் சுபங்கி கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, சில தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்த இவர், தமிழில் நீலி என்கிற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார்.
அதே போல் விஜய் டிவி சீரியலில் டாப் 10 டிஆர்பி-யில் இடம்பிடித்து வரும், 'பாண்டியன் ஸ்டோர்' தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்க, முதலில் கமிட் ஆனது இவர் தான். இவரை வைத்து ப்ரோமோ காட்சிகள் கூட வெளியான நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதில், ஹேமா சதீஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏம்மா இப்போ இது ரொம்ப அவசியம்மா? கை - கால் செயலிழந்த குணசேகரனை காண்டாக்கிய நந்தினி!
இவர் அடுத்தடுத்து, சில கன்னட படங்களில் நடித்து வந்ததால் தான் பாண்டியன் ஸ்டார் தொடரில் இருந்து விலக காரணம் என கூறப்பட்டது. ஆனால் வெள்ளித்திரையில் இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சீரியல்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிதா கவுடா பைனல் வரை சென்ற போதிலும், டைட்டிலை கைப்பற்ற முடியவில்லை.
அதே போல் கன்னடத்தில் துவங்கப்பட்ட குக் வித் கிறுக்கு, மற்றும் டான்ஸ் டான்ஸ் நிகழ்ச்சியிலும் ஃபைனல் வரை முன்னேறியவர் கவிதா கவுடா. இதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே சிவம் தொடரிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கவிதா கவுடா தன்னுடைய வெகேஷனை கொண்டாட, துபாய்க்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'தல' தோனியின் முதல் படம் டக் அவுட்டா.. பிக்கப்பா..? 'LGM' முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்!