Asianet News TamilAsianet News Tamil

ஏம்மா இப்போ இது ரொம்ப அவசியம்மா? கை - கால் செயலிழந்த குணசேகரனை காண்டாக்கிய நந்தினி!

எதிர்நீச்சல் சீரியலில் இன்று ஒளிபரப்பாக உள்ள, எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Ethirneechal serial 29th promo and episode details
Author
First Published Jul 29, 2023, 2:07 PM IST

குணசேகரனுக்காக ஜனனி, ஈஸ்வரி மற்றும் நந்தினி ஆகியோர் ஜீவானந்தத்திடம் இருந்து சொத்துக்களை வாங்கியே தீர வேண்டும் என பிடிவாதமாக உள்ளனர். அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்கள் வந்தால் மட்டுமே தற்போது மருத்துவமனையில், உடல் நலம் இன்றி அனுமதிக்கப்பட்டிருக்கும் குணசேகரன் நலம் பெறுவார் என்பதால், கௌதமியின் உதவியோடு ஜீவானந்தத்தை பார்த்து, சொத்துக்களை கேட்கலாம் என ஈஸ்வரி ஐடியா கொடுக்க, ஜனனி இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை கூறிவிட்டாலும், தன்னுடைய கணவருக்காக நானே கௌதமிடம் பேசுகிறேன் என ஈஸ்வரி கூறுகிறார்.

ஈஸ்வரி மிகவும் செண்டிமெண்ட்டாக கௌதமுக்கு போன் போட்டு பேசும் நிலையில், கௌதம் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருப்பதால், ஜீவானந்தத்தை சந்திக்க உதவுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Ethirneechal serial 29th promo and episode details

LGM Review : சினிமா பயணத்தை சிக்சருடன் தொடங்கினாரா தோனி? - எப்படி இருக்கிறது எல்ஜிஎம்? முழு விமர்சனம் இதோ

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.இதில்  நந்தினி, ஜனனி, ஈஸ்வரி ஆகிய மூவருமே குணசேகரனை சந்தித்து எப்படியும் ஜீவானந்தம் இருந்து சொத்துக்களை வாங்கி விடலாம் என பேசுவதற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள். குணசேகரனை பார்த்ததுமே நந்தினி சைலண்டாக கரிகாலனிடம் என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்க்கு கரிகாலன் மாமாவுக்கு ஒரு பக்கம் விளங்காம போச்சு என்று சொல்ல, நந்தினி என்னடா இப்படி சாதாரணமா சொல்ற என கேட்கிறார். அதற்கு கரிகாலன் உசுரு போகல அதுவரைக்கும் சந்தோஷம் என சொல்கிறார்.

Ethirneechal serial 29th promo and episode details

வசூலில் மாஸ் காட்டும் சந்தானம்! DD ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு தெரியுமா?

பின்னர் குணசேகரனை வச்ச கண்ணு எடுக்காமல் உத்து... உத்து... பார்த்துக்கொண்டிருக்கும் நந்தினியை பார்த்து என்னம்மா இப்படி உத்து உத்து பாக்குற என குணசேகரன், பழைய கெத்துடன் கேட்க...  "ஐ ஃபீல் ரியலி சாரி அபௌட் திஸ் மாமா" என நந்தினி கூறுகிறார். இப்போதைக்கு இங்கிலீஷ்ல பேசறது ரொம்ப முக்கியமாம்மா என குணசேகரன் காண்டாகி நந்தினி இடம் கேள்வி  கேட்பதோடு இந்த ப்ரோமோ முடிவடைந்துள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios