வசூலில் மாஸ் காட்டும் சந்தானம்! DD ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு தெரியுமா?
நடிகர் சந்தானம் நடிப்பில், நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் DD ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், அதைத்தொடர்ந்து வெளியான a1, டகால்டி, பிஸ்கோத்து, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம், போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
எனவே மீண்டும் ஹாரர் காமெடியான 'DD ரிட்டர்ன்ஸ்' படத்தை கையில் எடுத்தார் சந்தானம். நேற்று வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் எஸ் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். RK என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை சுரபி சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் லொள்ளு சபா மாறன், பிரதீப் ராவத், FEFSI விஜயன், ராஜேந்திரன், முனீஸ்காந்த், சாய் தீனா, தீபா ஷங்கர், லொள்ளு சபா மனோகர், கூல் சுரேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக வைத்து ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 2.8 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர், சந்தானம் படத்திற்கு இப்படிப்பட்ட சிறந்த ஓப்பனிங் கிடைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக, பேய்களை வைத்து காமெடியாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் வசூல்... தொடர்ந்து அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
குடி பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்.! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை..!