குடி பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்.! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை..!
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து, நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தயாரிப்பாளர்கள் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஜாக்கி செரீப், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணா, யோகி பாபு, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ரஜினிகாந்த் மேடையில் மிகவும் சுவாரசியமாக பல விஷயங்கள் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனக்கு கதை கூறியது பற்றி பேசினார்... "அண்ணாத்த படத்திற்கு பின்னர், தன்னிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் வந்தார்கள். அவர்கள் கூறிய கதை எல்லாம் பாட்ஷா அல்லது அண்ணாமலை படம் சாயலில் இருந்ததால், நிறைய கதைகளை நிராகரித்தேன்... அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது."
காக்கா - கழுகை உதாரணமாக வைத்து குட்டி கதை கூறி... ரசிகர்களை குழம்ப வைத்த சூப்பர் ஸ்டார்!
காரணம் ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் அப்பா என்றால் இயக்குனர் அம்மா. நல்ல கதை மிகவும் முக்கியம் எனக் கூறினார். நெல்சன் திலீப் குமாரை 10 மணிக்கு கதை சொல்ல வர சொன்னேன். அவர் கொஞ்சம் சாவகாசமாக 12 மணிக்கு தான் வந்தார். வந்ததுமே ஒரு நல்ல காபி கொடுங்க என கேட்டார். குடிச்சிட்டு கதையின் ஒன் லைன் மட்டுமே சொன்னார். கதை பிடித்ததால் விரிவாக கதையை சொல்ல சொன்னேன், இன்னும் 'பீஸ்ட்', படத்தின் படபிடிப்பு 10 நாட்கள் உள்ளது, அதை முடித்து விட்டு வந்து கதை சொல்கிறேன் என்றார். அதன் பின்பே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதாக சூப்பர் ஸ்டார் தெரிவித்தார்.
மேலும் மேடையில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம், எனவே தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்தார். ஒருவேளை குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால், இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் இருந்திருப்பேன் என உருக்கமாக பேசிய ரஜினிகாந்த், அதற்காக குடிக்க வேண்டாம் என்பது இல்லை... எப்போதாவது குடிங்கள். இந்த குடிப்பழக்கம் உங்களுடைய அம்மா, பொண்டாட்டி, குடும்பத்தில் இருக்கிறவங்களை கஷ்டப்படுத்தக் கூடாது என பேசினார்.
பிரமிக்க வைத்த 'ஜெயிலர்' ஆடியோ லான்ச் போட்டோஸ்! எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் தெரியுமா?