காக்கா - கழுகை உதாரணமாக வைத்து குட்டி கதை கூறி... ரசிகர்களை குழம்ப வைத்த சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை வெளியீட்டு விழாவில்... தன்னுடைய பாணியில் குட்டி கதை ஒன்றை கூறி, ரசிகர்களை குழம்ப வைத்துள்ளார்.
ரஜினிகாந்த நடித்து முடித்துள்ள, 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம், பிரமாண்ட தயாரித்துள்ள இந்த படத்தின், இசைவெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் இப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் இப்படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அனிரூத், ஹுக்கும் பாடலை பாடி முடித்த பின்னர்... மீண்டும் பாட வேண்டும் என ரசிகர்கள் ஆரவாரத்தோடு அன்பு கோரிக்கை வைக்க, ரசிகர்கள் முன்பு தீயாக அந்த பாடலை மீண்டும் பாடினார். அதே போல் 'ஜெயிலர்' படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னா, 'காவாலா' பாடலுக்கு ரசிகர்கள் முன் ஆடியது அரங்கத்தையே அதிர வைத்தது.
மேலும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பலரும், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து, பகிர்ந்து கொண்டனர். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில், செம்ம கூலாக... ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்போது, இவர் கூறிய குட்டி கதை ஒன்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"காகங்களும் மற்ற பறவைகளும் அனைவரையும் தொந்தரவு செய்து கொண்டே இருந்ததாம். அதில் ஒரு காகம், கழுகு ஒன்றை தொடர்ந்து தொந்தரவு செஞ்சிச்சாம். ஆனால் காகத்தை அந்த கழுகு எதுவுமே செய்யவில்லை. மாறாக கழுகு அதை பற்றி கவலைப் படாமல் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடும். காகத்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கழுகுடன் இணைந்து பறக்கவும் முடியவில்லை, போட்டி போடவும் முடியவில்லை என கூறியுள்ளார். இதில் தலைவர் காகம் என யாரை சொல்கிறார் என்பது தான் பல ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
'ஜெயிலர்' ஆடியோ லான்ச்..! வெறித்தனமான பர்ஃபாம்மென்ஸுக்கு தயாரான தமன்னா - அனிரூத்! வைரலாகும் வீடியோ!
அதாவது சமீப காலமாக பிரபல நடிகர் ஒருவரை சூப்பர் ஸ்டார் என... அவரின் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், ஒருவேளை அவருக்காக தான் இந்த கதையை தலைவர் கூறினாரா? என நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.