LGM Review : சினிமா பயணத்தை சிக்சருடன் தொடங்கினாரா தோனி? - எப்படி இருக்கிறது எல்ஜிஎம்? முழு விமர்சனம் இதோ
கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ள எல்.ஜி.எம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுவும் தயாரிப்பாளராக, அந்த வகையில் அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம்). இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார்.
எல்.ஜி.எம் திரைப்படத்தில் யோகிபாபு, நதியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு மத்தியில் தற்போது இப்படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள், அதுகுறித்து தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... 5 மாசம் படுத்த படுக்கையா இருந்தேன்... மீண்டு வந்தது எப்படி? - சீக்ரெட் சொன்ன ரோபோ சங்கர்
உண்மையாக சொல்லப்போனால் எல்ஜிஎம் படத்தின் ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. ஆனால் இந்த படத்தின் பிரச்சனை என்னவென்றால் சுமாரான திரைக்கதை தான். படத்தின் நீளம், ஒன்றாத காட்சிகள் அதுமட்டுமின்றி ஹரிஷ் - இவானா இடையேயான காதல் மற்றும் இவானா - நதியா இடையேயான உறவு ஆகியவை சுத்தமாக எடுபடவில்லை. எல்ஜிஎம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என பதிவிட்டுள்ளார்.
எல்ஜிஎம் படம் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இது எண்டர்டெயினிங் ஆக உள்ளது. முதல் பாதி நன்றாகவும், இரண்டாம் பாதி ஓரளவு டீசண்ட் ஆகவும் உள்ளது. நதியா, ஹரிஷ் கல்யாண், யோகிபாபு என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
எம்.எஸ்.தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது, ஆனால் படம் மட்டமாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி சிரிக்க வைக்கும் படி காட்சிகள் உள்ளன. வருங்கால மாமியாருடன் பிணைப்பு திறனை அழிக்கும் வகையில் பலவீனமான கதையாக உள்ளது. டீசண்ட் ஆக அனைவரும் நடித்திருந்தாலும், சராசரிக்கும் குறைவான காதல் கதையை காப்பாற்ற முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
சின்ன சின்ன வேடிக்கையான தருணங்களும், நிறைய போரிங் தருணங்களைக் கொண்ட ஒரு சராசரிக்குக் குறைவான திரைப்படம் தான் எல்ஜிஎம். ஒன்லைன் அருமையாக இருந்தாலும், அதனை எடுத்துள்ள விதம் மிகவும் மோசமாக உள்ளது. தல தோனிக்கு தயாரிப்பில் இது ஒரு மோசமான அறிமுகம் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... நடிகை ஷோபனா வீட்டில் பணத்தை அபேஸ் செய்த வேலைக்கார பெண்... சிக்க வைத்த Gpay - பின்னணி என்ன?