அஜித்திற்கே தல சுற்றவைத்த தளபதி...“பிகில்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் செய்த மாஸான காரியம்... வைரலாகும் வீடியோ...!
தல அஜித்திற்கு போட்டியாக “பிகில்” படத்தில் தளபதி விஜய் செய்துள்ள காரியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த படத்தில் முதன் முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பவானி என்ற பெயரில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், கெளரி கிஷன், ஸ்ரீமன், அர்ஜூன் தாஸ், சாந்தனு உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: "கை" தட்டும் போது கூட ரொமான்ஸா?... நயன் - விக்கி அக்கப்போரு தாங்க முடியலடா சாமி...!
அனைவரும் “மாஸ்டர்” படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கும் நிலையில், மார்ச் 22ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா பீதியால் உலகம் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் போன்றவை கூட தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான “பிகில்” திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தளபதி விஜய் செய்த மாஸான காரியம் ஒன்று சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!
இந்த படத்தில் விஜய் பைக் சேசிங் காட்சி ஒன்றில் நடித்திருப்பார். அந்த காட்சியில் நடிப்பதற்காக டூப் ஏதும் போடாமல், தளபதி விஜய்யே வேகமாக பைக் ஓடியுள்ளார். அப்படி பைக்கில் செம்ம வேகமாக வந்த விஜய், அதே வேகத்தில் படு மாஸாக யூ-டர்ன் போட்டு திரும்பும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: போட்டோ எல்லாம் மேட்டரே இல்ல... நடிகருக்காக 2வது காதலரை கழட்டிவிட்ட நடிகை....!
பைக் சேசிங் சீன் என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருது தல அஜித் மட்டுமே. டூப் ஏதும் போடாமல் ஸ்டேண்ட் காட்சிகளில் நடிக்கும் அஜித், பைக் சேசிங் காட்சிகள் என்றால் செம்ம குஷியாக நடித்து கொடுப்பார். இந்நிலையில் தல அஜித்திற்கு போட்டியாக விஜய் செய்துள்ள இந்த மாஸ் பைக் சேசிங் சீனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.