"கை" தட்டும் போது கூட ரொமான்ஸா?... நயன் - விக்கி அக்கப்போரு தாங்க முடியலடா சாமி...!
அதில், இருவரும் ஆளுக்கு ஒவ்வொரு கையை ஒன்றாக இணைந்து ஓசை எழுப்பியுள்ளார்.
இரண்டு உலக போர்களை விட மக்களை அதிகம் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா உள்ள தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் இந்த வைரஸின் பாதிப்பை குறைக்கும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தங்களது உயிரையும் பணயம் வைத்து சேவை புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை கெளரவிக்கும் விதமாக அனைவரும் தங்களது வீட்டுவாசலில் நின்று கை தட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி நேற்று மாலை சரியாக 5 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கைதட்டி தங்களது பாராட்டை தெரிவித்தார்.
இதனை திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கைதட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், இருவரும் ஆளுக்கு ஒவ்வொரு கையை ஒன்றாக இணைந்து ஓசை எழுப்பியுள்ளார். இந்த ரொமான்டிக் போட்டோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் பலரும் கைதட்டும் போது கூட ரொமான்ஸா?.... உங்க இரண்டு பேரோட அக்கப்போரு தாங்க முடியலடா சாமி என்று அலுத்துக் கொள்கின்றனர்.