லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,  விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், 
பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகியை முன்னிட்டு தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணி முதலே தியேட்டர் வாசல்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். 

இந்த படத்தில் ஜே.டி. என்ற பெயரில் கல்லூரி பேராசிரியராக விஜய்யும், பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். முதன் முறையாக இந்த படத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளதால் படத்திற்கு வேற லெவலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த ரசிகர்களுக்கு விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதனால் நேற்று இரவு முதலே தியேட்டர்களில் மேள, தாளத்துடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

 

இதையும் படிங்க; அம்சமான ஸ்லீவ் லெஸ் உடை... லேசாக தெரியும் இடை... அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

தியேட்டர் வாசல்களில் விஜய்யின் கட் அவுட், பேனர்கள், தோரணம், மின் விளக்கு அலங்காரங்கள் என மாஸ் காட்டிய ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், வான வேடிக்கைகளை பற்ற வைத்தும் மாஸ்டர் ரிலீசை தீபாவளி போல் கொண்டாடினர். விஜய் பட வெளியிட்டின் போது  ரசிகர்கள் செய்யும் மற்றொரு கொண்டாட்டமான விஷயம் அவருடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது. குடம் குடமாக பாலை கீழே கொட்டுவது பெரும் விமர்சனங்களை உருவாக்கியது. 

 

இதையும் படிங்க: அடக்கொடுமையே... கண்கூசும் அளவிற்கு படுகேவலமான உடையில்... 40வது பிறந்தநாளை கொண்டாடிய கிரண்...!

எனவே தன்னுடைய சர்க்கார் பட வெளியீட்டின் போது யாரும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும், அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள் என்றும் விஜய் அறிவுறுத்தியிருந்தார். எனவே வித்தியாசமாக யோசித்த விஜய் ரசிகர்கள் மாஸ்டர் பட போஸ்டருக்கு பிரபல குளிர்பானத்தை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...