தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக புரிந்து வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள், தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார்.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் தனது 68 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பூஜை நடந்து முடிந்த நிலையில் இன்று அந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் வைரலாக மாறி வருகிறது. 

குறிப்பாக விஜய் அவர்களின் இளமையான அந்த தோற்றம், அவருடைய ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது என்றே கூறலாம். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அவர் சிரிப்பே ஒரு தனி அழகு.. யோகி பாபு வீட்டு விசேஷத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கங்குவா - வைரலாகும் போட்டோஸ்!

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக ஒரு பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் அண்மையில் சவுத் ஆப்பிரிக்காவில் இந்த படத்தில் வரக்கூடிய ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவல்களின்படி தளபதி 68 திரைப்படத்தின் அனைத்து மொழிகளுக்கான ஆடியோ உரிமத்தை பிரபல T-Series நிறுவனம் பெற்றுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எத்தனை கோடி ரூபாய்க்கு இந்த ஆடியோ உரிமம் பெறப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. தற்பொழுது லியோ திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில், அவருடைய அடுத்த திரைப்படமும் ஜோராக உருவாகி வருவது அவருடைய ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.

Thalapathy 68: 'தளபதி 68' பட பூஜையில் செம்ம ஸ்டைலிஷாக டீ-ஷர்ட்டில் கலந்து கொண்ட விஜய்! வெளியானது வீடியோ!